தீபிகாவுக்கும் பேட்மிண்டனுக்கும் தொடர்புண்டு

மும்பைஇந்தித் திரையுலகத்தில் சமீப காலங்களில் பல பயோபிக் படங்கள் வெளிவந்துள்ளன, உருவாகியும் வருகின்றன. அந்த வரிசையில் பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து பயோபிக் படத்தை இந்தி நடிகரான சோனு சூட் தயாரிப்பதற்காக உரிமை வாங்கியுள்ளார்.
இது சம்பந்தமாக சிந்து குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரைச் சந்தித்து கதையையும் தயார் செய்துவிட்டனர்.ஆனால், சிந்து கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சமீப காலமாக அந்தக் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கலாம் என செய்திகள் வந்தது. தன்னை யாரும் அதற்காக அணுகவில்லை என சமந்தா தெரிவித்துவிட்டார்.

 

இந்நிலையயில் சமீபத்திய பேட்டி ஒன்றில், தன் கதாபாத்திரத்தில் நடிக்க தீபிகா படுகோனே சிறந்த தேர்வாக இருப்பார் என சிந்து கூறியுள்ளார். பிரபல பேட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோனே மகள்தான் தீபிகா என்பது கூடுதல் சிறப்பு. தீபிகாவுக்கும் பேட்மிண்டன் நன்றாக விளையாடத் தெரியும். அதனால் அவர் தனியாக பயிற்சியும் எடுக்கத் தேவையில்லை.

இருப்பினும் சிந்துவின் இந்த ஆசையை தயாரிப்பாளர் தரப்பும், இயக்குனரும் ஏற்றுக் கொள்வார்களா, தீபிகா நடிக்க சம்மதிப்பாரா என்பது அடுத்த கேள்வி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here