பெற்றோர் சித்தரவதை: சிறுவன் தற்கொலை

கீவ்  – தனது பெற்றோரின் சித்தரவதை தாங்க முடியாமல், 8 வயது சிறுவன் ஒருவன் 9-ஆவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அண்டன் எனப்படும் அந்தச் சிறுவன் பள்ளி முடிந்து  வீடு திரும்பிய சிறிது நேரத்திலேயே, தெற்கு உக்ரைனின் எனர்ஹோடரில் உள்ள தனது வீட்டின் ஜன்னலில் இருந்து விழுந்ததால் மாண்டான்.

அண்டனின் பள்ளி சீருடை கிழிந்து இருப்பத்தால் அவனை பெற்றோர் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனை பொறுத்துக் கொள்ளாது அச்சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக  விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், அச்சிறுவனின் குறுப்புதனத்தால் அவனை அடிக் கடி  அடித்து கண்டித்திருப்பதை  அவனின் பெற்றோர் ஒப்புக் கொண்டதாக உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.இதனிடையே, தலைமறைவாகிய அச்சிறுவனின் பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here