6000mAh பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் M30s ஸ்மார்ட் போன்

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 10 என்.எம். பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 1.5 இயங்குதளம் கொண்டிருக்கும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மூலம் உருவாகியிருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் டூயல்-டோன் ஃபினிஷ், பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப்-சி வழங்கப்பட்டுள்ளது.

samsung galaxy M30s- ன் சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் எக்சைனோஸ் 9611 10 என்.எம். பிராசஸர்
– மாலி-G72MP3 GPU
– 4 ஜி.பி. LPDDR4x ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
– 6 ஜி.பி. LPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
– மெரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஒன் யு.ஐ. 1.5
– டூயல் சிம்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, சாம்சங் GW2 சென்சார்
– 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
– 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, சாம்சங் SK3P8SP சென்சார்
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டால்பி அட்மாஸ்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் ஒபல் பிளாக், சஃபையர் புளு மற்றும் பியல் வைட் நிறங்களில் வெளிவந்துள்ளது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 29ம் தேதி சாம்சங் இந்தியா ஆன்லைன் தளம் மற்றும் அமேசான் வலைத்தளங்களில் நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here