தும்பாட் – உணவத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த நபர் அடையாளம் தெரியாத துப்பாக்கிக் காரனால் இரு முறை சுடப்பட்டிருந்தும், தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
இச்சம்பவம் தும்பாட், பெங்காலான் கூபோர், கம்போங் நெடினில் ஓர் உணவகத்தில் நடந்துள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் சுடப்பட்ட நபர், தனது இரு நண்பர்களுடன் உணவருந்திக் கொண்டிருக்கும்போது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அவரை நோக்கி 3 முறை சுட்டுள்ளான்.
உணவகத்தில் இருந்தோர் உயிருக்குத் தப்பி ஓடிய வேளையில், சூடு பட்ட நபர் அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்து தப்பியிள்ளார்.
அவரைத் துரத்திச் சென்ற துப்பாக்கிக்காரன் வேறு வழியில்லாமல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். எனினும், வீட்டினுள் ஓடிய நபருக்கு கையிலும் தொடையிலும் சூடு பட்டுள்ளது.
தும்பாட் மருத்துவமனையில் அவர் உடல் தேறி வருவதாக கிளந்தான் புலனாய்வுத் தலைவர் வான் கைருடின் வான் இட்ரிஸ் தெரிவித்தார்.








