சென்னை – நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என்று பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பெங்களூரில் உள்ள பரப்பன அக்ராஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்த பின் இதனை தெரிவித்துள்ளார். கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை இடைத்தேர்தலில் போட்டியில்லை எனவும் அவர் அறிவித்தார்.