சசிகலா உறவினர் விவேக்கின் வீட்டில் சிக்கிய கடிதம்!

சென்னை –

சசிகலா உறவினர் விவேக் ஜெயராமன் வீட்டில் சசிகலா எழுதிய கடிதம் ஒன்று சிக்கியிருப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறை விவகாரத்தில் சிக்கியுள்ள சசிகலா மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர் சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகள். அந்த வகையில் தற்போது விவேக் ஜெயராமன் வீட்டில் சிக்கிய கடிதம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பரில் இந்த சோதனையை வருமான வரித்துறையினர் மேற்கொண்டனர். அப்போதுதான் சசிகலா புதிதாக பல்வேறு சொத்துக்களை வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பல சொத்துகள் செல்லாத நோட்டுக்களைப் பயன்படுத்தி வாங்கியது தெரியவந்தது.

இந்தச் சொத்துகள் வாங்கப்பட்டது தொடர்பாக சசிகலாவே தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் வருமான வரித்துறையினருக்கு கிடைத்துள்ளது. சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் வீட்டில் இந்தக் கடிதம் கிடைத்துள்ளது.

பெங்களூரு ஜெயிலில் இருந்த சசிகலா செப்டம்பர் 2017ஆம் ஆண்டு இந்தக் கடிதத்தை எழுதி உள்ளார். அதில் செல்லாத ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்தி என்னென்ன சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here