தொன்மையான பொங்கல் திருநாள் தேதியை மாற்றிவிடாதீர்கள்!

சென்னை –

பிரதமருக்கு சேவகம் செய்து மகிழ்விப்பதற்காக தொன்மையான பொங்கல் திருநாள் தேதியை மாற்றிவிடாதீர்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பொங்கல் திருநாள் குறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், பிரதமர் பேசப்போகிறார் என்று தமிழர் திருநாளாம் மாட்டுப் பொங்கல் நாளன்று பள்ளிக்கு மாணவர்களை வரவழைத்து, மத்திய பாஜக அரசிடம் தொடர்ந்து குளிர்காய நினைத்த, அதிகார அநியாயத்தைக் கண்டித்துப் போராட்டம் அறிவித்தேன்.

உடனடியாகப் பூசிமெழுகும் காரணம் சொன்னது எடப்பாடி அரசு. இதோ 20ஆம் தேதி மாணவர்களுக்காகப் பேசப் போகிறாராம் பிரதமர்.

அவருக்குச் சேவகம் செய்து மகிழ்விப்பதற்காக, தொன்மையான பொங்கல் திருநாள் தேதியை மாற்றிவிடாதீர்கள் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். தமிழர் பண்பாட்டு விழாவை, உங்கள் பதவி ஆசையைத் தீர்க்கும் பாதம் தாங்கும் விழாவாக மாற்றிவிட வேண்டாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here