நஜிப் செய்வதைச் செய்யட்டும்!

ஈப்போ –

ஒன்பது குரல் பதிவுகள் வெளியிடப்பட்டதை எதிர்த்து நடவடிக்கை எடுப்பது முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக்கின் உரிமை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் லத்திஃபா கோயா கூறினார்.

அவர் ஏதாவது செய்து கொள்ளட்டும். அது அவரின் உரிமைக்குட்பட்டது என்று நேற்று பேராக் மந்திரி பெசார் அலுவலகத்தில் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமாட் பைசால் டத்தோ அஸுமுவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குறிப்பிட்டார்.

எம்ஏசிசி புத்ராஜெயா தலைமையகத்தில் அதிகாரத் துஷ்பிரயோகம், கிரிமினல் சதி, நீதிக்கு இடையூறு, தேசியப் பாதுகாப்புக்கு மிரட்டல் போன்ற அம்சங்கள் இருப்பதாக நம்பப்படும் ஒன்பது தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளை லத்திஃபா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

அதே சமயத்தில் இவ்விவகாரம் பீனல்கோட் சட்டத்தின் கீழ் வருவதால் போலீசாரின் முழு விசாரணைக்கு அவை ஒப்படைக்கப்படும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
போலீஸ் மட்டுமல்லாது எம்ஏசிசியும் புலன் விசாரணை நடத்துவதற்குரிய அம்சங்கள் அதில் இடம்பெற்றிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சபா கிமானிஸ் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் காலத்தில் இந்தக் குரல் பதிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன என்று குற்றஞ்சாட்டப்படுவது பற்றி எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும் என்று லத்திஃபா பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here