உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது

ஆக்லாந்து:

உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டை வரவேற்றது. 2023 ஆம் ஆண்டு பிறந்ததை ஒட்டி கண்ணை கவரும் வகையில் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

உலகின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரேலியா, ஓசியானா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு. உலகில் சூரியன் உதிக்கும் முதல் நாடாக நியூசிலாந்து உள்ளது.

மலேசிய நேரப்படி இன்று மாலை 7.00 மணியளவில் நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வானவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை கொண்டாடினர்.

கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. புத்தாண்டு வாழ்த்துக்கள் என சொல்லி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து 2023 ஆம் ஆண்டை வரவேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here