பனிப்பாறை இடிந்தது; நேப்பாளத்தில் ஏழு மலையேறிகள் மாயம்

காத்மாண்டு –

நேப்பாளத்தின் வடமேற்கில் இமயமலை மீது ஏறிக் கொண்டிருந்தவர்கள் மீது பனிப்பாறை இடிந்து விழுந்ததில் ஏழு பேர் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுள் நால்வர் தென் கொரியர்கள் ஆவர்.

நேப்பாளத்தின் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து நூற்று ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் அச்சம்பவம் நிகழ்ந்தது. காணாமல் போன மேலும் மூவர் நேப்பாளத்தைச் சேர்ந்த வழிகாட்டிகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அன்னபூர்ணா பிரதேசத்தில் அவர்கள் மலையேறிக் கொண்டிருந்த நேரத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது. அப்போது கனமழை பெய்து கொண்டிருந்தது. அத்துடன் பனியும் பொழிந்து கொண்டிருந்தது. இது பனிப்பாறை இடிந்து விழுவதற்குக் காரணமாக இருந்தது என்று அதிகாரிகள் கூறினர்.

அன்னபூர்ணா மலை 8,091 மீட்டர் (26,545 அடி) உயரம் கொண்டதாகும். உலகின் பத்தாவது உயரமான மலையாக அது விளங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here