வேலை வாய்ப்பு இல்லாததால் ஒரே ஆண்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை!

புதுடில்லி –

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்துவிட்டதாக பரவலாக ஒரு பேச்சு உள்ளது. ஆனால் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் அதற்கு மாறான தகவல் வெளியாகி உள்ளது.

2018ஆம் ஆண்டில் நடைபெற்றுள்ள குற்றங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை இந்திய ஊடகம் வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 2018ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து, 34 ஆயிரத்து, 516 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது 2017-ம் ஆண்டைவிட 3.6 சதவீதம் அதிகம்.

இதில் மராட்டிய மாநிலம் முதலிடத்திலும் (17,972 பேர்), தமிழ்நாடு 2ஆம் இடத்திலும் (13,896 பேர்), மேற்குவங்காளம் 3ஆம் இடத்திலும் (13,225 பேர்), மத்தியபிரதேசம் 4ஆம் இடத்திலும் (11,775 பேர்), கர்நாடகம் 5ஆம் இடத்திலும் (11,561 பேர்) உள்ளது. இந்த 5 மாநிலங்களிலேயே நாட்டின் பாதி தற்கொலைகள் (50.9 சதவீதம்) நடைபெற்றுள்ளது.

2018ஆம் ஆண்டு சராசரியாக தினமும் வேலை இல்லாதவர்கள் 35 பேரும், சுயதொழில் செய்வோர் 36 பேரும் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளனர். அந்த ஆண்டில் வேலை இல்லாதவர்கள் 12,936 பேரும் (9.6 சதவீதம்), சுயதொழில் செய்வோர் 13,149 பேரும் (9.8 சதவீதம்) தற்கொலை செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here