உலகை மிரட்டும் கொரோனா வைரஸ்: முன்னரே எச்சரித்த தமிழ்ப் பஞ்சாங்கம்

கொழும்பு –

தமிழ் வாக்கியப் பஞ்சாங்கத்தில் உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் உருவாகும் என்பது கணிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
உலக மக்களை மிரட்டி வரும் மிகக் கொடூரமான வைரஸாக கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றது.

சீனாவில் பரவத்தொடங்கிய இந்த வைரஸால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரஸ் பரவியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நோய் பரவும் அபாயம் உள்ளதால் சீனர்களுக்கு இலங்கையில் அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.

பாம்பின் இறைச்சியிலிருந்து பரவியதுதான் இந்தக் கெரோனா வைரஸ். சீனாவில் பரவிய இந்த வைரஸ் படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது.
ஒவ்வோர் ஆண்டும் பஞ்சாங்கம் வெளியாவது வழக்கம். அதில் இந்தியாவிலும் உலகத்திலும் நடக்க உள்ள நல்லது மற்றும் சில கெட்ட விஷயங்களை அடிக்கோடிட்டு காட்டுவது வழக்கம்.

அவற்றில் சில நடக்காமல் போகலாம். ஆனால் பெரும்பாலானவை நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இது பலமுறை நிரூபணம் ஆகியுள்ளது.

அந்த வகையில் சுத்த வாக்கிய சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் (2019 -2020) எதிர்கால பலன் என சில குறிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் முக்கிய கோயில்களில் பல கோடிக்கணக்கான புதையல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
அதோடு இந்த விகாரி ஆண்டில் என்ன நடக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் விஷ ஜந்துக்கள் அதிகமாக இனவிருத்தி அடையும். விஷ ஜந்துக்களால் மக்களுக்கு அதிக தொல்லைகள் ஏற்படும். தமிழகத்தில் முக்கிய கோயில்களில் கோடிக்கணக்கான புதையல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒரு புதிய வைரஸ் நோய் மேற்குத் திசையில் இருந்து உற்பத்தி ஆகும்.

இவ்வாறு அந்தப் பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here