4 வாகனங்கள் விபத்து: டாக்சி ஓட்டுநர் மரணம்

தெமர்லோ –

தெமர்லோ அருகே கம்போங் தஞ்சோங் பெலுங்கு, ஜாலான் தெமர்லோ திரியாங்கில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் டாக்சி ஓட்டுநர் சுப்பிரமணியம் நரசையா மரணமுற்றார்.

நேற்று பிற்பகல் 2.00 மணி அளவில் நான்கு வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கின. மூன்று கார்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் விபத்தில் சிக்கியதாக போலீஸ் கூறியது.
புரோட்டோன் வீரா டாக்சி ஓட்டுநர் சுப்பிரமணியம் பலத்த காயத்துடன் தெமர்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இவருக்கு வயது 68. இந்தச் சாலை விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here