கொரோனாவை விரட்டும் உணவுகள் தமிழக மருத்துவர் ஆலோசனை

சென்னை –

குறிப்பிட்ட இந்த வகையான உணவுகளைச் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் நோயிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக மருத்துவர் ஒருவர் கூறுகிறார்.
சீனாவில் கொரோனா வைரஸ் மிக மோசமாகப் பரவியிருக்கிறது.

மேலும் 19 நாடுகளுக்கும் அது பரவியிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் அஸ்வின் விஜய் என்பவர் ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார்.

கொரோனா வைரஸ் நோயைத் தவிர்ப்பதற்கு இந்த உணவுகளைச் சாப்பிடுங்கள். ஒரு விரல் அளவு இஞ்சியை எடுத்து அதை வெந்நீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடிக்கலாம். அல்லது தேநீரில் கலந்து குடிக்கலாம்.

பச்சை காய்கறிகள், அரைக்கீரை, சிறு கீரை, முருங்கைக்கீரை ஆகிய கீரை வகைகளைச் சாப்பிடுவது மிகவும் நல்லது. வைட்டமின் சி இருக்கும் கொய்யாப்பழம், ஆரஞ்சுப் பழம், நெல்லிக்காய் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

கிருமி நாசினியாகக் கருதப்படும் மஞ்சள் தூளை தினந்தோறும் உணவில் சேர்த்து வர வேண்டும். சாம்பார், ரசம் ஆகியவற்றில் மஞ்சள் தூளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அப்படிச் சாப்பிட்டால் நிச்சயமாக நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here