புத்ரா ஜெயா –
சீனாவின் வுஹான் நகரிலிருந்து மலேசியாவுக்கு அழைத்து வரப்படவுள்ள 78 மலேசியர் களும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் அறிவித்துள்ளார்.
மலேசியாவுக்குத் திரும்புவோர் கொரோனாவைரஸ் நோய்த் தொற்றுக் கிருமிகளைக் கொண் டிருப்பது சந்தேகத்திற்கிடமானால் அவர்கள் மீது சுகாதாரப் பரிசோதனை நடத்தப்படும்.
சுகாதார ரீதியான பரிசோதனை நடத்தப்படும்போது அவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்.
கொரோனாவைரஸ் தாக்கம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர் என அவர் மேலும் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்படும் இடம் எது? தனித்தீவில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவரா என்ற கேள்விக்கு ஜெரஜாக் தீவு அவர்களுக்கு தேவையில்லை.
அவர்கள் அனைவரும் தங்கும் விடுதிகளில் தனிமையில் தங்க வைக்கப்பட்டு அவர்கள் மீது சுகாதாரப் பரிசோதனை நடத்தப்படும் என மகாதீர் தெரிவித்தார்.