சரியும் சீன வர்த்தக சாம்ராஜ்யம்

பெய்ஜிங் –

உலகம் முழுவதும் எச்சரிக்கை மணி அடித்து வரும் கொரோனா வைரஸால் இதுவரை சீனாவில் 1,110 பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதோடு 42,638 பேரும் இந்தக் கொடிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

பல நிறுவனங்கள், தொழிலகங்கள், உணவகங்கள், மால்கள், கடைகள் என மூடப்பட்டுக் காணப்படுகின்றன. கொரோனாவின் தொற்றுதலுக்குப் பயந்து யாரையும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்த நாட்டு அரசு மக்களை எச்சரித்துள்ள நிலையில் அந்த நாட்டின் சில்லறை வியாபாரமும் 50 விழுக்காட்டிற்குக் கீழ் குறைந்துள்ளது.

இந்த நிலையில் முதல் காலாண்டில் சீனாவின் ஸ்மார்ட் போன் விற்பனை 50 விழுக்காடு வரை வீழ்ச்சியடையக் கூடும் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன. ஏனெனில் பல சில்லறை கடைகள் நீண்ட காலத்திற்கு மூடப்பட்டுள்ளன.

மேலும் இவைகள் எப்போது திறக்கப்படும் என்றும் தெரியாத நிலையில் விற்பனை பாதியாக குறையலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் சீனாவில் கொரோனாவிற்கான முழுமையான தடுப்பு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் வெகு வேகமாகப் பரவி வரும் கொரோனாவால் நாளுக்கு நாள் மரணங்களும் அதிகரித்து வருகின்றன.

மேலும் தாக்கங்களும் அதிகரித்துள்ளன. இதனால் இன்னும் பொருளாதாரம் சரியவே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனாவினால் இந்தத் திட்டங்கள் நிறுத்தப்படலாம் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் நடப்பு காலாண்டில் சீனாவில் இருந்து மொபைல் போன் இறக்குமதி பாதியாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபோல், கம்ப்யூட்டர்கள் இறக்குமதியும் பாதிக்கப்படும் என தொழில்துறையினர் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here