கொரோனாவுடம் மோதினோம், அதுதான் மேதினம்

ஆடு ஆங்கிலம் பேசுமா?

பேசும் என்றால் அது நகைச்சுவை. மே மாதத்தில் எல்லா ஆடுகளும்  ஆங்கிலம் பேசும் என்றால் அது நகைச்சுவைச் சிந்தனை. இவற்றுக்கும் அப்பால் தொழிலாளர் வர்க்கம் எந்த மொழியில் பேசும்? இதற்கான பதிலை எந்த மொழியில் எதிர்பார்க்கலாம் என்பதும் சிந்தனைதான்.

உலகமெங்கும் ஒரே மொழி காதல் மொழி  என்பர். அதன் பின்,  விளையாட்டாளர்கள் கோல் என்ற வார்த்தைதான் உலகத்தில் பொது மொழி என்றார்கள். ஆனால், அதையும் தாண்டி இப்போது  கொரோனா என்ற வார்த்தை பிரசித்திப் பெற்றுவிட்டது. இதில் தொழிலாளர்களே மிகவும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர் என்பது மிகவும் வருத்தமான செய்தி.

ஒவ்வோராண்டும் தொழிலாளர் தினமென்றால் அது விழாவாக இருக்கும். பெரு விழாவாகக் கொண்டாடப்படும். மே முதல் நாள் அதற்கான நாள். மலேசியர்களுக்கு மட்டும் அல்ல. உலகமெங்கிலும் தொழிலாளர் தினம் மிக முக்கிய தினமாகக் கொண்டாடுவது வழக்கம்.

இன்றைய நிலையில் அக்கொண்டாட்டம் தலைகீழ் கொண்டாட்டமாக மாறிவிட்டது என்பது மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது.

உழைத்து உழைத்து உலகை உயர்த்திய தொழிலாளர் வர்க்கம், இன்று பிழைப்பை இழந்து பெருந்துயரில் வீழ்ந்துகிடக்கிறது என்றால் காரணம் இல்லாமல் இருக்குமா?

கொரோனா அல்லது கோவிட் – 19 தொற்று உலகை சீண்டிக்கொண்டிருக்கும்போது தொழிலாளர் தினக்கொண்டாட்டத்தை எப்படி கொண்டாடுவது? இது குற்றமாகாதா?

ஆழ்துயரில் தொழிலாளர்கள் வதைபட்டுக்கொண்டிருக்கும்போது வாழ்த்துகளை எப்படிக்கூறிக்கொள்ள முடியும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here