மலாக்கா, மார்ச் 9-
மலாக்கா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக அம்னோ கட்சியைச் சேர்ந்த சுலைமான் முகமட் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் இறுதி முடிவாக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதவைப் பெற்ற நிலையில் சுலைமான் முதலமைச்சர் ஆகிறார்.
அமானா கட்சியின் சார்பாக இதுநாள் வரையில் முதல்வராக இருந்த அட்லி ஸஹாரியை தனது ஆதரவின் வாயிலாக வீழ்த்தியிருக்கும் சுலைமான் மலாக்கா மக்களின் பொதுநலத்தில் மீது அதிக கவனம் செலுத்தப் போவதாகக் கூறியிருக்கிறார்.