மூவார், மார்ச் 11-
சுல்தான் இஸ்மாயில் பாலத்தில் சீன முதியவர் ஒருவர் தற்கொலை முயற்சியாக பாலத்தில் ஏறுகிறார். அவரை தடுத்து நிறுத்துகிறார் மலாய்க்கார ஆடவர் ஒருவர்.
மலேசியாவில் இனத்துவேசம் என்பதும் பிரிவினைவாதம் என்பதும் அரசியல்வாதிகளால் மட்டுமே நீரூற்றி வளர்க்கப்பட்டு வருகிறது என்பதையும் சாதாரண மக்கள் தங்கள் வாழ்க்கையை அனைத்து இனங்களோடும் இணைந்து மகிழ்ச்சியாக நடத்த வேண்டும் என்ற சிந்தனை கொண்டிருப்பதையும் இச்சம்பவம் பொட்டில் அடித்தாற்போல் காட்டுகிறது.
பாலத்தில் ஏற முயலும் சீன ஆடவரிடம் நயமாகப் பேசி மலாய்க்கார ஆடவர் தற்கொலை முயற்சியிலிருந்து விடுவித்து விடுவது நாடு முழுவதும் பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்டும் வருகிறது.
இது போன்ற சம்பவம் இனத்துவேசம் பேசும் ஒரு சில அரசியல் கட்சிகளுக்கும் சம்மட்டி அடியைக் கொடுத்திருக்கிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.