கோலாலம்பூர், மார்ச் 12-
சரித்திரம் என்பது படைக்கப்படுவது அல்ல. செயல்முறைத்திட்டங்களால் இயல்பாகவே உருவாக்கம் பெற்றுவிடுபவை. காலாகாலம் இப்படித்தான் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
சரித்திரம் என்பது என்ன வென்று தெரியாமலேயே அமைந்துவிடுபவையாகத்தான் இதுவரையும் இருந்து வந்திருக்கிறது.
அந்த வகையில் துணைப்பிரதமர் இல்லாத அமைச்சரவை அமைந்திருப்பது சரித்திரமா? சாதனையா? பிடிவாதமா?
நாட்டின் எட்டாம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் என்று மனப்பாடம் செய்துகொண்டதை மறந்துவிடவேண்டும் என்று சொல்லும் காலம் இது. சொன்னதை மீள்பார்வை செய்யவேண்டிய காலமும் இதுதான்.
டத்தோஸ்ரீ அன்வார் துணைப்பிரதமர் ஆகக்கூட வழியற்றுவிட்டதை வஞ்சகக் கணக்கில் சேர்க்கவேண்டியிருக்கிறது. அப்படிச் சேர்த்தால் அது பழிச்சொல் ஆகிவிடும். அந்தப்பழி வந்துவிடக்கூடாது என்பதற்குப் பொருத்தமாகச் சிந்தித்திருக்கிறார் இன்றைய பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின்.
ஒரே ஒரு கேள்வியை அவர் கேட்பதாகவே வைத்துக்கொள்ளலாம். அப்படி என்ன கேட்டிருப்பார். ஏன் துணைப்பிரதமர்?அதற்கு அவசியம் இல்லையே? என்று கேட்பதாக இருந்தால்….!
துணைப்பிரதமர் நியமனம் மேலும் சிக்கலை ஏற்படுத்தலாம். என்ற அர்த்தத்தில் அவர் அப்படி கேட்க நேரலாம் என்பதைப் புரிந்துகொள்கிறோம்.
ஒன்று மட்டும் நிதர்சனம். அதாவது அமைச்சரவையின் நோக்கமே மக்களுக்குச் சேவை செய்வதுதான். சேவையே நோக்கமாக இருக்கும்போது துணைப்பிரதமர் நியமனம் என்பது ஒரு தடையாக இருக்காது என்ற பஞ்ச் வசனம் இனிக்குமல்லவா!
உண்மையும் அதுதான். துணைப்பிரதமர் நியமனம் செய்யப்பட்டிருந்தால் இன்னொரு எதிர்ப்பு முகத்திற்கு டான்ஸ்ரீ முஹிடின் தயாராகி இருக்கவேண்டும்.
மிகுந்த மதிநுட்ப ஆலோசனையோடு துணைப்பிரதமர் நியமனம் செய்யப்படவில்லை என்பது சாதனையான சரித்திரம்.
தாம் இல்லாத காலத்தில் பிரதிநிதிப்பது யார் என்றெல்ல்லாம் யோசிக்கவேண்டாம் என்று அவர் பதிலை வைத்திருக்கிறார்.
அமைச்சரவையில் சிலருக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளாமல் இருக்கமுடியாது.
இதில் யார் பெரியவர் என்ற கேள்வியும் எழப்போவதில்லை.
அப்படி எழுந்தால் பெரும்பான்மை இருக்காது. பெரும்பான்மை என்பது எப்போதுமே பிரச்சினையாக இருக்கும்போது பெரும்பான்மைக்குப் பெரும்பான்மை எதற்கு? என்று கேட்டு வைப்பதிலும் தவறு இல்லை. சிறுபானமையும் பெரும்பான்மையாகிவிட்டதே
சாதித்திருக்கிறார் பிரதமர் என்ற வாதம் என்று நடந்துகொண்டிருந்தாலும் அதுபற்றியெல்லாம் கவலைப் படத்தேவையில்லை. காரியங்கள் நடக்கத் தொடங்கிவிடும். நடக்கும் காரியங்கள் யாவும் மக்கள் சேவைக்குள் அடங்கிவிடும். அதுதானே முக்கியம்.
மக்களைவையில் பேசப்படும் அனைத்தும் மக்களுக்கானது. திட்டங்கள் யாவும் நாட்டின் நன்மைக்கானது. பிரச்சினை என்று வந்தால் களையப்படும். களையப்பட்டால் பிரச்சினை எழவே வாய்ப்பில்லை.
பேசுவதற்கு ஆள் இல்லை என்ற கவலை இனி வரவே கூடாது. ஒரு வார்த்தை சொன்னாலும் நூறு தடவை சொன்னமாதிரி என்றுத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் சமம். அனைத்திற்கும் மலேசிய கறுப்புச்சமுதாயம் தயாராகிவிட்டது.
எது நடந்தாலும் விரலுக்கு ஏற்ற வீக்கமாகத்தானே இருக்கும்.