கோலாலம்பூர்:
ஜெலுத்தோங்கில் உள்ள, ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 21 வயதுடைய ஆடவர் ஒருவரிடம், கொள்ளையடித்ததாக, ஒரு பெண், மூன்று ஆண்கள் மீது, இன்று, செஷண்ஸ் நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டது.
22 வயதுடைய Muhammad Loqman Nasri, 22 வயதுடைய Hakim Mohd Amin, 20 வயதுடைய Muhammad Amsyar Md Asraf, ஒரு 15 வயதுப் இளம் பெண் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி, நள்ளிரவு 12.30 மணியளவில், அர்பன் சூட்ஸ் (Urban Suites) என்ற, வாடகை வீட்டில், Muhammad Syazwan Aiman Muhammad Shahrul என்பவரிடம், ஒரு ஐஃபோன் 13 புரோ மேக்ஸ் (iPhone 13 Pro Max), RM100 ரிங்கிட் ரொக்கம், RM482 ரிங்கிட் டச் ‘என்’ கோ (Touch ‘n Go) மின்-பணப்பை உள்ளிட்ட, மொத்தம், RM582 மதிப்புள்ளப் பொருட்களை, கொள்ளையடித்ததாக, குற்றம் சாட்டப்பட்டது.
நீதிபதி ஜூரைடா அப்பாஸ் (Juraidah Abbas) முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த அந்த நால்வரும் விசாரணை கோறினர்.
இந்த வழக்கு, குற்றவியல் சட்டம் பிரிவு 395-இன் கீழ், விசாரிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை பிரம்படியும் விதிக்கப்படலாம்.
இதனிடையே, துணை அரசு வழக்கறிஞர் Puteri Nor Nadia Mohamed Iqbal, ஒவ்வொருவருக்கும், தல RM8,000 ரிங்கிட் பிணைத் தொகை விதிக்கப்பட வேண்டும் என்று கோரினார்.
இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்கள் தனிப்பட்ட, நிதிச் சிரமங்களைக் காரணம் காட்டி, ஜாமின் தொகையை குறைக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
எனவே தான், நீதிமன்றம், ஒவ்வொருவருக்கும், ஒரு நபர் உத்தரவாதத்துடன் தல RM4,000 ரிங்கிட் ஜாமீன் அனுமதித்தது.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடாது என்ற நிபந்தனையையும், நீதிமன்றம் விதித்தது.
அதே வேளையில், ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கும், வழக்கறிஞர்களை நியமிப்பதற்கும், இந்த வழக்கின் மறு செவிமடுப்பு அக்டோபர் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.





















