கடந்த காலங்களில் தமிழ்ப்பள்ளிகளின் தரம், கல்வி நிலை குறித்து பேசுவதற்கும் திட்டமிடுதலுக்கும் சரியான அமைப்பு ஒன்றிருந்தது.
தாயில்லா பிள்ளைக்குப் பரிந்துபேசும் பராமரிப்பு போல இருந்த அந்த அமைப்புதான் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத்திட்டக்குழு தலைவராக இருந்தவர் டாக்டர் என். எஸ். இராஜேந்திரன்.
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முழுப்பட்டியலைத் தயாரித்து வைத்திருந்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.
பள்ளிகளின் நிலைமை, அதன் தேவை. மாணவர்களின் நிலைமை என்றெல்லாம் விவரங்களை கையடக்கமாக வைத்திருந்தவர் அவர்.
பல்வேறு அரசியல் காரணங்களுக்காக அவர் மாற்றப்பட்டார் என்பதற்கு நிறைய காரணங்கள் இருந்தன.
இன்று, அந்நிலைமை மாறிவிட்டது. தமிழ்ப்பள்ளிகள் எடுப்பார் கைப்பிள்ளையாகிவிட்டது. கல்வித்துறையில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
கறுப்பிக் காலணி மாற்றம் மட்டுமே நினைவில் நிற்கின்றது. மீண்டும் தமிழ்ப்பள்ளிகளின் நிலைமை மாற்றம் பெறவேண்டும் என்றால் டாக்டர் என்,எஸ்.இராஜேந்திரன் ஏன் நியமிக்கப்படக் கூடாது என்கிறார் சுங்கை ரம்பை தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வாரியக் குழுத்தலைவர் ஏ.அன்பழகன்.
புதிய அரசாங்கத்தில் பழையவர்களின் வருகை அதிகரித்திருக்கும் வேளை, டாக்டர் என்.எஸ்.இராஜேந்திரன் மீண்டும் நியமிக்கப்பட்டால் தமிழ்ப்பள்ளிகளின் குரல் திடமாய் ஒலிக்கும் வகை பிறக்கும்.
இதற்கு மஇகா குரல்கொடுக்கலாம். ம.இ.கா அதைச்செய்தால் தமிழ்ப்பள்ளிகளுக்குப் பலமாக இருக்கும் என்கிறார் அன்பழகன்.