சம்பளத்துடன் விடுமுறை: சீனாவைத் தவிர அனைத்து நாடுகளிலும் ஷோரூம்களை மூடியது ஆப்பிள்

ஷோரூம்களை மூடியது ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம், சீனாவைத் தவிர அனைத்து நாடுகளிலும் தனது பிரத்யேக ஷோரூம்களை மார்ச் 27 வரை மூடுவதாக அறிவித்துள்ளது. தனது ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆப்பிள் சிஇஓ டிம் குக் கூறும்போது, ”சீனாவில் நடைபெற்ற சம்பவங்கள் மூலம் நிறைய பாடங்களைக் கற்றிருக்கிறோம். மக்கள் அடர்த்தியைக் குறைப்பது மற்றும் சமூக இடைவெளியை அதிகரிப்பது ஆகியவற்றின் மூலம் கரோனா தொற்றைக் குறைக்க முடியும்.

மற்ற நாடுகளில் புதிய வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் எங்கள் ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பதில் கூடுதலாக ஓர் அடி எடுத்து வைக்கிறோம்.

எனினும் ஆப்பிளின் ஆன்லைன் ஷோரூம் திறந்திருக்கும். ஊழியர்கள் வாய்ப்பிருந்தால் வெளியில் இருந்து பணிபுரியலாம். அனைத்து ஊழியர்களுக்கும் வழக்கமான ஊதியமே வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 24 நாடுகளில் 500-க்கும் மேற்பட்ட ஷோரூம்களை ஆப்பிள் கொண்டுள்ளது. வைரஸ் பாதிப்பு குறைந்ததை அடுத்து அண்மையில் சீனாவில், மீண்டும் ஆப்பிள் தனது சேவையைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here