உலகளவில் கோவிட் 19 வைரஸ் – 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பெய்ஜிங்:

சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் 155 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உலகளவில் 7,157 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 1,82,438 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அதில், 79 ஆயிரத்து, 212 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

சீனாவில் 3,226 பேர், இத்தாலியில் 2,158 பேர், ஈரானில் 853, ஸ்பெயினில் 342 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு 123 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 39, கேரளாவில் 24, உத்தர பிரதேசத்தில் 13, கர்நாடகாவில் 8, தெலுங்கானாவில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here