காது கொடுத்து கேட்காவிட்டால் காத்திருக்கின்றது பேராபத்து

அலட்சியம் செய்யும் மக்கள்

கோலாலம்பூர், மார்ச் 21-

அரசாங்கத்திடம் உதவிபெறுவதுதான் மக்களின் கடமையாக இதுவரை இருந்திருக்கிறது. இன்னமும் இருந்துவருகிறது. முதல் தடவையாக மக்களிடம் உதவி கேட்கிறது அரசாங்கம்.

வீட்டில் இருந்தாலே போதும் என்பதுதான் அது. இதை அன்பான வேண்டுகோளாக ஏற்றுக்கொள்ளாமல் அலட்சியப்படுத்தினால் விவரீதம் தலைக்குமேல் காத்திருக்கிறது என்றாகிவிடும்.

அரசாங்கம் யாரையும் பழிவாங்க வேண்டுமென்று நினைக்கவில்லை. இதைப் புறக்கணித்தால் மக்கள் பலியாகிவிடுவர் என்பதைக் கருத்தில்கொண்டே சும்மா இருந்தாலே சுகம் என்று கூறிவருகிறார்கள்.

கோவிட் 19 நாளுக்குநாள் மோசமாகிவருகிறது இன்றைய நிலையில் 1,030 பேர் பாதிப்புகுள்ளாகி இருக்கின்றனர். பத்துக்கும் குறைவாக இருந்தபோதுதான் பத்துமலைத் திருத்தலத்தில் தைப்பூசம் நடைபெற்றது. பத்துமலை என்றாலே மாபெரும் கூட்டம் கூடுவது வழக்கமாக இருக்கும்.

இதே போல்தான் பிற ஆலயங்களிலும் ஒருத்தருக்குக் கூட கொரோனா 19 தொற்று இல்லை. இது அதிசயத்தில் ஆழ்த்தும் செய்தியாகவே உலகம் முழுவதும் இருந்தது.
இது, ஆச்சரியமான செய்தி என்றாலும் கொரோனா 19 தொற்றவே தொற்றாது என்பது பொருளல்ல. இந்நோய் மனிதர்களைக் குறிவைத்து எய்யப்பட்ட நோய் என்பதால் மனிதர்கள் தப்பிவிட முடியாது.

வெளிநாடுகளில் இருந்துதான் கொரோனா 19 வந்திருக்கிறது என்பது வெளிப்படையான உண்மை. அப்படியென்றால் வெளித்தொடர்பில் இந்தியர்கள் தீவிரமாக இல்லை என்பதும் உணவுப் பழக்கமுமே என்பது மிகத்தெளிவாகிறது. சுத்தமான மலேசிய இந்தியர்களாகத்தான் இன்னும் இருந்துவருகிறார்கள்.

நாட்டின் கொரோனாவின் தீவிரம் யாரால் அதிகமாகி இருக்கிறது? தெரிந்தும் ஏன் முன்வந்து சோதனைக்கு ஆட்படவில்லை என்பதே கேள்விக்குறியாகி இருக்கிறது.

கொரோனாவின் தீவிரம் இன்னும் மோசமடையாமல் இருக்க ராணுவம் களம் இறங்கிகிறது என்ற அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் நடமாட்டம் சட்டம் கடைப்பிடிக்கப்படவில்லை என்றாகிறது.

சொல்லியும் விளங்கிக்கொள்ளாத மனிதர்கள் எப்படி மக்களுக்கு வழிகாட்டிகளாய் இருக்கப்போகிறார்கள்? நாட்டிற்கு நன்மை செய்கின்றவர்கள் சராசரி மக்கள்தாம். சமய வாதிகளால்தான் பாதிப்புகள் அதிகமாகியிருக்கின்றன என்று இந்த சமயத்தில்தான் சொல்லவேண்டியிருக்கிறது. அவர்களால்தான் கொரோனா 19 அதிவேகமாகப் பரவிவருகிறது.

இந்த சமயத்தில் அவர்களாகவே முன்வராமல் இருந்தால் ராணுவம் அதை செய்யும். அப்போது அனைவருக்கும் வலிக்கும்.

இதைத்தான் மான்னரும் அடிக்கடி வலியுறுத்திவருகிறார். காது கொடுத்து கேட்காவிட்டால் காதிருந்தும் செவிடர்களாகத்தான் இருப்பார்கள். காது இருக்கும், ஆனால், கேட்காது. அதை வலிதான் உணர்த்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here