ஒரு உயிரை கூட இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,மார்ச் 23-
சட்டப்பேரவையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
* கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதலாக 500 கோடி நிதி ஒதுக்கி செய்யப்படுகிறது.
* கொரோனாவால் 100 ஆண்டுகளில் சந்தித்திராத சவாலை தற்போது சந்திக்கிறோம்.
* கொரேனாவால் ஒரு உயிரை கூட இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை.
* அரசு மருத்துவமனைகளில் 92 ஆயிரத்து 406  படுக்கை வசதிகள் உள்ளது. தேவைக்கு ஏற்ப அது அதிகரிக்கப்படும்.
* 560 வென்டிலேட்டர்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
* மேலும், கல்லுாரி விடுதி மாணவர்களுக்கான உணவு மானியம் ஆயிரம் ரூபாயில் இருந்து, ஆயிரத்து 100 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
* வெளிநாடு சென்று வந்தவர்களின் விவரங்கள் மற்றும் அவர்களுடன் இருந்தவர்களை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.
* அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள்  தோளாடு தோள் நிற்க வேண்டும்.
  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here