இத்தாலியில் 37 டாக்டர்களின் உயிரைப் பறித்த கொரோனா!

ரோம் –

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது இத்தாலியை துவம்சம் செய்து வருகிறது. இந்தக் கொடிய வைரஸ் தாக்கி இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைத் தொட்டுள்ளது.

டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் பகல் இரவாக பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். கொடிய வைரஸ் மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்களையும் விட்டுவைக்கவில்லை.

இதுவரை 6,205 மருத்துவ ஊழியர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் 37 டாக்டர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேற்று மற்றும் 3 டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதில் என்ன கொடுமை என்றால் பாதிக்கப்பட்டவர்களில் 8.3 சதவிதம் பேர் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள். இதனால் இத்தாலி என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்து வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்கிய செவிலியர் ஒருவர் மற்றவர்களுக்கு தன்னால் பரவக்கூடாது என்பதற்காக உயிரை மாய்த்துக் கொண்டார் எனக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here