கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது- 2 டிரில்லியன் டாலர் நிவாரணம்

வாஷிங்டன்,மார்ச் 28-

கொரோனா வைரஸ் பாதிப்பானது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 94 ஆயிரத்து 199 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதுவரை உலகமெங்கும் கொரோனாவால் 27 ஆயிரத்து 231 பேர் மரணமடைந்துள்ளனர்.

சீனாவை அடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பானது ஐரோப்பிய நாடுகளை மையம் கொண்டுள்ளது. இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 919 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 134 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியை தொடர்ந்து பல நாடுகளில் நேற்று நூற்றுக்கணக்கானவர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில் 65 ஆயிரத்து 719 பேர்கள் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிகிச்சை பலனின்றி 773 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 138 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸ் நாட்டிலும் 32 ஆயிரத்து 964 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்நாட்டில் சிகிச்சை பலனின்றி 299 பேர் பலியாகினர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 995 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here