நவீன கருவிகள் வாங்க சுகாதாரத் துறைக்கு வெ.15 லட்சம்

சுகாதாரத் துறைக்கு வெ.15 லட்சம்

கோலாலம்பூர் , மார்ச் 28-

சுகாதரத்துறை வெறுங்கையால் முழம்போட்டுக்கொண்டிருக்க முடியாது. கொரோனா பாதிப்பை எதிர்த்துப்போராட மருத்துவர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் .

உறக்கத்தை இழந்திருக்கிறார்கள். இதற்காகத் தகுதியுள்ள தாதியர்கள், மருத்துவர்கள் தற்காலிகப் பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.

இதற்குமேலும் கருவிகள் இருப்பதுதான் மிக அவசியமாக இருக்கிறது. கருவிகள் இல்லையென்றால் கிருமிகள் இருப்பதை அறிய முடியாது.

சுகாதாரம், கொரோனா எதிர்ப்புக்காக சுகாதார அமைச்சுக்கு 15 லட்சம் வெள்ளியை பிரதமர் ஒதுக்கப்படிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சுகாதாரதுறைக்குத் தேவை நிபுணத்துவம், புதிய நவீன கருவிகள். இவற்றுக்கெல்லாம் தட்டுப்பாடு இல்லாமல் பி 40 பிரிவு மக்களுக்கு சேவைகள் வழங்கப்படவேண்டும். இவற்றுக்கு ஏற்றவாறு நவீன தொழில் நுட்பக்கருவிகள் சுகாதாரத்துறையிடம் இருக்க வேண்டும்.

சுகாரத்துறை இடையுறு இல்லாமல் செயல்படவேண்டும் என்று மலேசிய மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் ஞானபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here