பெட்டாலிங் ஜெயா, மார்ச் 31-
ஆபத்தின் விளிம்பில் சிறுதொழில் வணிகர்கள் சிக்கிக் கிடப்பதாகக் கூறுகிறார்கள். மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு நடப்பில் இருக்கும் இக்காலத்தில் சிறுதொழில் முற்றாக முடங்கிக்கிடக்கிறது.
சிறுவணிகம் தலைநிமிரத் தள்ளாடுகிறது. தூக்கி நிறுத்த போதுமான உதவிகள் கொடுக்கப்படவில்லை. உள்ளூர் சிறுவணிகர்களின் நிலைமை திவாலாகிவிடுமென்று சிறுவணிக உரிமையாளரான கிறிஸ்டினா என்ஜி என்ற பெண்மணி கவலை தெரிவித்துள்ளார்.
பேரங்காடியில் இயங்கும் கடைகளுக்கான வாடகை, ஊழியர்ளுக்கான சம்பளம் ஆகிவற்றைச் சமாளிக்க முடியவில்லை என்கிறார் அவர்.
கூடுதல் கிளைகள் உள்ள வர்த்தகங்கள் மிகவும் பாதிப்படைந்திருக்கின்றன என்று அவர் கூறுகிறார் அவர்.
அரசு பாதுகாப்பளித்தால் மட்டுமே இவற்றைச் சமாளிக்க முடியும். சிறுவணிகத்திற்கான வரிகள் அகற்றப்படவும் வாடகை அகற்றம் ஆகியவற்றால் இவற்றைச் சமாளிக்க வாய்ப்பிருக்கிறது.
சிறுவணிகம் முடக்கப்படுமானால் பலர் வேலையிழப்புக்கு ஆளாக நேரிடும்.
இதில் மிக முக்கியமாக 2020 வரையிலான வருமான வரிவிலக்கு அளிக்கப்படுவதும் அவசியமாகிறது.
கொரோனா பாதிப்பு காலத்தில் வணிகப் பாதிப்பு இன்னும் நீண்ட காலத்திற்கு இருக்கும் என்று நம்பப்படுகிறது.
வணிகர்களின் முதுகெலும்பாக இருக்கும் எஸ் எம் இ நிதிப்பிரச்சினையில் பலவீனமாகவும் இருக்கிறது என்பதும் குறைபாடாகவே இருக்கிறது.