உணவுப் பிரச்சினையை ஒத்திப்போட முடியாது!

பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் இராமசாமி

கோலாலம்பூர், மார்ச் 31-

   

    அரசாங்கம் மிகுந்த பொறுப்புணர்வுடன் கோரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு எவ்வகையிலும் இடையூறு செய்யாமல் இருப்பதே சிறந்த உபகாரமாகக் கருத்தப்படுகிறது.

 

    இதைதான் தனியார் நிறுவனங்கள். குறிப்பாக உணவு தயாரிப்பு நிறுவனஙள் முழு ஒத்துழைப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பதுகின்றனர்.

 

    நல்ல எண்ணத்துடன் உதவும் இவர்களை பாராட்டினாலும் மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டின் விதிகளை மீறிச்செயல்படுவது இடையூறாகவே இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.

 

    மக்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்களைக் கொண்டு சேர்ப்பதற்கு முறையான அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

 

    ஆனாலும் காலாவதியாவதற்குமுன் மக்களுக்குக் கொடுக்கப்பட்டால் அதனால் பயன் உண்டு. ஆதலால் இதற்கென முறைப்படுத்தப்பட்டவர்களால் பல டன்கள் எடை கொண்ட உணவுப்பொருட்களை, குறிப்பாக பதப்படுத்தப்பட்டு குளிரூட்டப்பட்ப்பட்ட பொருட்களைக் கையாள வாய்ப்புள்ளதா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

    இதற்கு தனியார் அமைப்புகள் உதவலாம். அவர்கள் அனுமதிக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும்.

 

    வசதியற்றவர்களுக்கு  உணவுப்பொருட்களை வழங்குவதற்குத் தடை விதிக்கக்கூடாது. நடமாட்டக் காலக்கட்டத்திற்குள் அல்லது அனுமதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை அனுசரித்து உணவுப்பொருட்களை விநியோகிக்க அனுமதிக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர்  மொஹிடின் அப்துல் காதர் தெரிவித்திருக்கிறார்.

 

    சமூக நல இயக்கம் இதற்கான முயற்சியை எடுத்துக்கொள்ளலாம் என்றும் பினாங்கு பயனீட்டாளர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் டத்தோ கோரிஸ் அத்தான் கூறியிருப்பதையும் பரிசீலிக்கலாம். உணவுத்தேவையை ஒத்திப்போட முடியாது என்கிறார் அவர்.

 

    சமூகச்சேவையாளர்கள் சிறப்பான சேவையாற்றிவருகிறார்கள். சிலசமயங்களில் அரசியல் வாதிகள் நெருங்குமுன் சமூகச்சேவையாளர்கள் மக்களுக்கான முதல் உதவிகளை வழங்கி உதவுகிறனர் பினாங்கு மாநில துணை தலைவர் பேராசிரியர் டாக்டர் இராமசாமி கூறியிருப்பதையும் கவனிக்க வேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here