இந்த ஆண்டு ரமலான் சந்தை கிடையாது – சிலாங்கூர் மந்திரி பெசார்

ஷாஆலம்:

இவ்வாண்டு ரமலான் சந்தை  இல்லை என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார். ஆனால் பண்டிகை காலத்திற்கு தேவையான பொருட்களை வாங்க வேறு இடங்கள் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

“ஆன்லைனில் ரமலான் பொருட்களை வாங்குவீர்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று அமிருடின் புதன்கிழமை (ஏப்ரல் 1) மாநிலத்தின் இரண்டாவது மீட்சி திட்டத்தை  அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சிலாங்கூரில் உள்ள நான்கு மாவட்டங்களான ஹுலு லங்காட், பெட்டாலிங், கோம்பாக் மற்றும் கிள்ளான் ஆகிய பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 சம்பங்கள்  இருப்பதால் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.

மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் ஹுலு லங்காட் மாவட்டத்தின் எல்லை மூடப்பட்டிருக்கிறது என்றார். இருப்பினும், கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட தற்போதைய தடை நீக்கப்படலாம், ஆனால் இது இந்த விஷயத்தில் சுகாதார அமைச்சின் நிலைப்பாட்டைப் பொறுத்தது என்று அமிருடின் மேலும் கூறினார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here