மகத்தான சேவைக்கு மருத்துவக் குழுவினரே சான்று -சுகாதாரத்துறை பெருமிதம்

கோலாலம்புர், ஏப்ரல் 1-

 இன்றைய காலக்கட்டத்தில் உண்மையான கதாநாயகர்களைத் தேடி அலைய வேண்டியதில்லை. அந்தப்பெருமைக்கு உரியவர்ளாக மதிக்கபடுகின்றவர்கள் மருத்துவக்குழுவினர் என்ற சிறப்பை வழங்கியிருக்கிறார் மலேசிய சுகாரத்துறை  தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா.

சேவைக்குத் தலைவணங்குவது என்பது உயர்ந்த பண்பு. அந்தப் பண்பில் முதலிடத்தில் இருப்பவர்கள் மருத்துவத்துறையினர் என்பதை எவரும் மறுப்பதில்லை.

பலம்  பொருந்திய போராளிகளாக கொரோனாவை எதிர்க்கும் ஆற்றல் வேறெவரிடத்தும் இல்லை. தங்களையும் காத்துக்கொண்டு எதிரியையும் சாய்க்க வல்ல சாதுர்யம் நாட்டின் பாதுகாப்புக்கு மிகக் பெரிய கேடயமாக விளங்குகிறது.

தங்கள் அன்புக்குரியவர்களைத் தனித்துவிட்டு, தங்களுக்கான நேரத்தை மருத்துவமனையில் செலவிடும் இவர்களின் தியாகத்திற்குமுன் மர்றவர்களின் தியாகம் சிறியதாகிவிடுகிறது. மருத்துவக்குழுவின் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல வேண்டும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here