துப்புரவு தொழிலாளியை மலர் தூவி பாராட்டிய பொதுமக்கள்

துப்புரவு தொழிலாளியை மலர் தூவி பாராட்டிய பொதுமக்கள்

சண்டிகார், ஏப்ரல் 1-

 

பஞ்சாப் நாபா நகரில் தூய்மைப்பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவுத் தொழிலாளர் மீது பூ மழை பொழிந்து பொதுமக்கள் வாழ்த்தியுள்ளனர்!!

 

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெளியே சென்றால் கொரோனா தொற்றிவிடுமோ என்கிற அச்சத்தில் மக்கள் வீட்டுக்குலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்தச் சூழ்நிலையிலும் துப்புரவுத் தொழிலாளர்கள் வீதி வீதியாக சென்று சாலைகளைப் பெருக்கித் தூய்மை செய்வதுடன் கழிவுகளையும் அகற்றி வருகின்றனர்.

இந்நிலையில், பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் நாபா என்னும் நகரில் இவ்வாறு தூய்மை பணி மேற்கொண்ட துப்புரவுத் தொழிலாளரை மக்கள் பூ மழை பொழிந்து பாராட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

 இது குறித்த வீடியோவை பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “துப்புரவுத் தொழிலாளி மீது நாபா மக்கள் காட்டிய அன்பையும், பரிவையும் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்என்று குறிப்பிட்டுள்ளார்

 

துப்புரவுத் தொழிலாளி தனது கை வண்டியுடன் நபாவில் ஒரு குறிப்பிட்ட பகுதி வழியாக நடந்து செல்லும் போது, மக்கள் தங்கள் மொட்டை மாடிகளில் இருந்து அவர் மீது பூக்களைப் பொழிந்தனர். மேலும் அவரை  பெரிய  கைதட்டலுடன் வரவேற்றனர். சிலர் துப்புரவுத் தொழிலாளிக்கு மாலை அணிவித்து அவரது முதுகில் தட்டி பாராட்டினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here