பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது

கோலாலம்பூர்:

பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில்  வாகனமோட்டி ஒருவரிடம் கொள்ளையடிக்க முயன்றதாக நம்பப்படும் இருவரை போலீசார் கைது செய்தனர்.

செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) இரவு 9.30 மணியளவில் ஜாலான் பூச்சோங்கில் உள்ள ஓ.யூ.ஜி பார்க்லேண்டில் ஒரு குழுவினரை அணுகி துன்புறுத்தியதை அடுத்து, 46 வயதான வாகன ஓட்டுநர் புகார் செய்ததாக பிரிக்பீல்ட்ஸ் ஓ.சி.பி.டி துணை ஆணையர் ஜைருல்னிசாம் மொஹட் ஜைனுதீன் @ ஹில்மி கூறினார்.

“இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மூன்று பேர் நெருங்கி வந்து தனது காரை விட்டு வெளியேறும்படி சொன்னதாக பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.  அவர் பயத்தில் இருந்து வெளியேறியபோது மேலும் சந்தேக நபர்களில் ஒருவர் தனது காரை ஹெல்மெட் மூலம் தாக்கினார் என்று பாதிக்கப்பட்ட அந்த பெண் கூறினார்.

பாதிக்கப்பட்ட அந்த பெண்  அவசர உதவி எண்ணான 999 அழைத்து சந்தேக நபர் தன்னை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக கூறியிருக்கிறார்.

ஏசிபி ஸைருல்னிசம்  புதன்கிழமை (ஏப்ரல் 1) மாலை 4.30 மணியளவில்  கம்போங் முஹிபாவில் காவல்துறையினர் தங்கள் மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் வாகனமோட்டியிடம் கொள்ளையடிக்க முயன்றதாக ஒப்புக்கொண்டனர். அவர்கள் மீதான   குற்றம் நிரூபிக்கப்பட்டால் மேலும் ஏழு ஆண்டுகளுக்கு மேல் போகாத  சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.

இதற்கிடையில், ஏ.சி.பி. ஸைருல்னிசம் கூறுகையில் ஏதாவது குற்றச் செயல் நடைபெறும் பட்சத்தில் உடனடி புகார் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here