கே.எல்.பேரங்காடிகளில் சமூக தூரம் கடைபிடிக்கப்படவில்லை – அன்வார் மூசா

கோலாலம்பூர்: கோலாலம்பூர் மொத்த சந்தையில் சமூக தொலைதூர நடைமுறைகள் இன்னும் திருப்திகரமாக இல்லை என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் டான் ஸ்ரீ அன்வார் மூசா தெரிவித்துள்ளார்.

நான் ஒரு பேரங்காடிக்கு சென்றிருந்தேன். பலர்  இன்னும் மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஒழுங்கை (MCO) பின்பற்றவில்லை என்பதைக் கண்டேன்.

உதாரணமாக, தொழிலாளர்கள் சிலர் பொருத்தமான முககவசங்கள் மற்றும் கையுறைகளை அணியவில்லை. லோரிகளும்  பொருட்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் மிக அருகில் நிறுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) தொழிலாளர்களை பரிசோதிக்கும் மற்றும் தொழிலாளர்களுக்கு கிருமிநாசினி சாவடி அமைக்கப்படும்” என்று அவர் சனிக்கிழமை (ஏப்ரல் 4) பேஸ்புக் நேரடி ஒளிபரப்பில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பேரங்காடியில் இரண்டு பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து 8 பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் சில்லறை வர்த்தகர்களுக்கு 500 வெள்ளி 5,810 கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது என்று அன்னுவார் மேலும் கூறினார்.

பங்களிப்புக்கு தகுதியான 15,365 உரிமம் பெற்ற வர்த்தகர்கள் உள்ளனர், ஆனால் 6,398 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். 227 விண்ணப்பதாரர்கள் நிராகரிக்கப்பட்டனர், இந்த விண்ணப்பங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன என்பதை நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here