கொரோனா -19 கோப்பை யாருக்கு? சீனா பின் வாங்குகிறதா!

கொரோனா -19 கோப்பை யாருக்கு?

புத்ரா ஜெயா, ஏப்ரல் 8-

கொரோனாவின் பேச்சு இல்லாமல் பொழுதுவிடியாது என்பதுபோல் ஆகிவிட்டது அன்றாட வாழ்க்கை.

உலகில் அதிகமாகப் பேசப்படுகின்ற ஒரு ஆட்டம் இருக்கிறதென்றால் அது கால்பந்தாட்டமாகத்தான் இருக்கும். உலகக் கால்பந்தாட்டம் என்பது கூட ஒரு தொற்றுநோய்போலத்தான் இருந்து வந்திருக்கிறது. சீசன் முடிந்ததும் அந்நோய் குணமாகிவிடும்.

அதுபோலவெ கொரோனா -19 தொற்று இருக்குமென்றாலும் லட்சக் கணக்கில் ரசிகர்களைக் கொண்டிருக்கவில்லை. லட்சக்கணக்கில் உயிர்களைக் கொன்று குவித்துக்கொண்டிருக்கிறது.

இந்த வகையில் கொரோனாவின் ஆட்டத்தில் பல நாடுகள் மண்ணைக் கவ்விக்கொண்டிருக்கின்றன. எதிர்த்துக் கோல் போட முடியாமல் தோற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்த ஆட்டம் எப்போது முடிவுக்கு வரும் என்று எவராலும் கணிக்க முடியவில்லை. கொரோனா – 19 கோப்பைக்கு குறிவைத்த சீனா வெற்றிபெற்றுவிடும் என்று அனைத்து நாடுகளும் எதிர் பார்த்தன.

ஆனால், கொரோனாவின் ஆட்டம் இப்படி சொதப்பிவிடும் என்று யாரும் நம்பவில்லை. ஒரு போலியான ஆட்டத்தை நம்பும்படி ஆடி, கோரோனா ஆட்டத்தை அறிமுகப்படுத்திவிட்டு, ஆட்டத்தில் பின் வாங்குகிறது என்பதை சந்தேகத்தோடுதான் பார்க்கின்றனர்.

கோப்பையை இழக்க முனைந்திருப்பதை உலக நாடுகள் ஆச்சரியத்தோடு பார்க்கின்றன.

இந்தத் தோல்விக்குப்பின்னால் ஏதோ சதி இருப்பதாக அமெரிக்கா கடுமையான வாதத்தை அன்றாடம் கூறிவருகிறது.

இந்த கொரோனா கோப்பை -19 ஆட்டத்தில் பல நாடுகளின் மனிதத்தலைகள் பந்தாக உருளுகின்றன. ஆட்டம் ஆரம்பிக்கப்பட்ட இடமான சீனா தந்திரமாக ஆடிவருகிறது. கட்டாயமாகக் கலந்துகொண்ட பிற நாடுகள் படுதொல்வியைச் சந்தித்தாலும் ஆட்டத்திலிருந்து பின் வாங்க முடியாமல் போராடிவருகின்றன.

உயிரைக்கொடுத்து ஆடினார்கள் என்ற வார்த்தைக்குப் பதில், உயிர்போகாமல் ஆடுவது எப்படி என்பதுதான் ஒவ்வொரு நாட்டின் இன்றைய கவலையாக இருக்கிறது.

சீனாவைத் தவிர்த்து 208 நாடுகளும் இந்த ஆட்டத்தில் படுதோல்வி அடைய வேண்டும். அதற்கான முயற்சிகளில் பல வல்லுநர்களைக் களமிறக்கிக்கொண்டிருக்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று.

இந்த ஆட்டத்தில் கொரோனா 19 வீழ்த்தப்படவேண்டும் என்ற அதி தீவிரத்தில் மலேசியா போராடிவருகிறது. இதில் வெற்றி காண வேன்டுமெனில் கொரோனா படுதோல்விடைய வேண்டும்.

கொரோனா கோப்பையை வெல்லப்போகும் நாடு எது என்பதைப் பொறுத்திருந்துதான்பார்க்க வேண்டும். வீட்டிலிருந்தே ஆட்டதைக் காணும்படி போலீசாரும் கூறிவருகின்றனர். உற்சாகம் மீறினால் சிறையுண்டு.

ஆதலால் வீட்டிலேயே இருங்கள் என்கிறது அரசு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here