அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 11 இந்தியர்கள் பலி

அமெரிக்காவில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்த அனைத்து இந்தியர்களும் ஆண்களே ஆவர்.

வாஷிங்டன்,ஏப் 8-

கொரோனா வைரஸ் பாதிப்பால் வல்லரசு நாடான அமெரிக்கா விழிபிதுங்கி நிற்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் தான் அதிக அளவில் காணப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில், 435,128 பேருக்கு கொரோனா பாதிப்பு காணப்படுகிறது.

கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் மட்டும் 14,795-பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பால், அமெரிக்காவில் வசித்து 11 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 16 இந்தியர்களுக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்த அனைத்து இந்தியர்களும் ஆண்களே ஆவர்.

பலியானவர்களில் 4 பேர் டாக்ஸி ஓட்டுநராக அமெரிக்காவில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

பணி நிமித்தமாகவும், கல்வி கற்கவும் அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்களை கண்டறிந்து உதவும் பணியில் இந்திய தூதரகமும், இந்திய அமெரிக்க வம்சாவளி அமைப்புகளும் களம் இறங்கியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here