தனிமைப்படுத்துதலின் ஒருநாள் செலவு வெ.150

கோலாலம்பூ, ஏப் 8-

தனிமைப் படுத்தப்படும் கொரோனா பாதிப்பாளருக்கான ஒருநாள் செலவு 150 வெள்ளி என்று தற்காப்புத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்திருக்கிறார். இது சராசரியான மருத்துவ செலவுக்கானது.

இது தவிர கூடுதலான பிற செலவுகளும் இருக்கின்றன, சலவையைப் பயன்படுதுவதாக இருந்தால் அதற்கான கட்டணம் வேறாக இருக்கும். இக்கட்டணத்தைத் தனிமைப் படுத்தப்படுகின்றவர்களே ஏற்கவேண்டும்.

தனிமைப்படுத்தப்படும் காலத்தில் நட்சத்திர விடுதிகளை நாடுவோர் அதற்கான கட்டணங்களுக்குத் தாங்களே பொறுப்பேற்றுக்கொள்ளவும் வேண்டும். இதற்காக 45 விடுதிகள் பதிவில் செயல்படுகின்றன.

வெளிநாடுகளுக்கான தூதரகத்தினர்களுக்காக இந்த விடுதிகளில் சில செயல்படுகின்றன. அதற்கான கட்டணத்தை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதே போன்று மற்றவர்களுக்கு நட்சத்திர விடுதிகள் தேவைப்படுமாயின் அதற்கான கட்டணத்தை அவர்களே ஏற்கவேண்டூம் என்றார் அவர். ஒதுக்கப்பட்ட விடுதிகளின் விதிமுறைகளைப் பின்பற்ற விதிமுறைகள் இருக்கின்றன.

இது தவிர வெளிநாடுகளிலிருந்து வருகின்ற அரசுப்பணியாளர்கள், உயர் அதிகாரிகள் யாவரும் அரசாங்கத்தின் தனிமைப்பகுதிகளில் தங்கவேண்டும்.

அதிக அளவில் திரும்புகின்ற மலேசியர்களைத் தனிமைப்படுத்த அதிகமான மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த திங்கட்கிழமை வரை 7,500 பேர் 122 மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். விடுதியில் தங்க விருப்பம் உள்ளவர்கள் 45 விடுதிகளில் ஒன்றைத்தேர்வு செய்து முன்பதிவும் செய்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.

தேசிய பேரிடர் வகையில் இதற்கான பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும். முன் பதிவு ரசீதுகள் போதுமானது என்றும் மூத்த அமைச்சரான அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here