ஜாகர்த்தா, ஏப்.9-
கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் கொரோனாவால் மரணமடைந்திருப்பது இந்தோனேசியா முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது அதன் சுவடே தெரியாத நிலையில் இருந்த இந்தோனேசியா தற்போது மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் அந்நாடு மேலும் 40 பேரை கொரோனாவுக்குப் பலி கொடுத்துள்ளது.
280 பேர் இதுவரையில் பலியாகியுள்ளனர். 3,293 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.