கட்டுப்பாட்டு காலம் மேலும் நீட்டிப்பு

கோலாலம்பூர், ஏப் 10-

மக்கள் அடமாட்டக் கட்டுப்பாடு மேலும் நீட்டிக்கப்படவேண்டும் என்ற ஆரூடங்கள் கடந்த ஒரு வாரமாகவேஅதிகமாப் பேசப்பட்டுவந்தன. ஏன் நீட்டிக்கபடவேண்டும் என்பதற்கான காரணங்களும் பேசப்பட்டன.

சுகாதார நடவடிக்கைகளில் இன்னும் முழுமையான வெற்றியடையவில்லை என்ற பொதுவான கருத்து கடந்த ஒருவாரமாகவே ஆழமாக விமர்சிக்கப்பட்டன.

சுகாதார நடவடிக்கைகளைப் பொறுத்தவரை சிறப்பான திட்டங்கள் கையாளப்பட்டும் மக்களின் ஒத்துழைப்பின்மையால் கொரோனாவைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
பொது மக்களின் புரிந்துணர்வின்மையே இதற்குக் காரணம் என்றுதான் சொல்லவேண்டும்.

மார்ச் 18 ஆம் நாள் தொடங்கி இன்றுவரை கொரோனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்த வண்ணமே இருப்பதன் காரணம் அலட்சியம் என்பதாகத்தான் இருக்கமுடியும். இந்த அலட்சியம் மாறினால்தான் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தமுடியும். இதை அடைப்படையைக்கூட நம்மால் நெருங்கமுடியவில்லை என்ற குரல்கள் அதிகாமாகவே ஒலித்தன.

மூன்று வாரங்கள் கடந்தும் வெற்றியடைய முடியாமல் தோல்வியின் கரங்கள் வலுவாகவே இருப்பதை உணர்ந்தே ஏப்ரல் 28ஆம் நாள்வரை மக்கள் நடமாட்டக்கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நீட்டிப்பு மக்களின் பலவீனம் என்பதாகத்தான்பொருள்படுகிறது. மக்கள் நடமாட்டக்கட்டுப்பாடு ஒழுங்கு மீறப்படுகிறது என்பதே காரணமாகப் பேசப்படுகின்றன. இதுதான் உண்மை என்பதால் மறுப்பதற்கும் தயாரில்லை. இதற்கு நிறைய சான்றுகள் இருக்கின்றன. நடமாட்ட மீறல்கள், கைது நடவடிக்கைகள் இதை உணர்த்துகின்றன.
மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு இன்னும் இறுக்கமடைய வேண்டும்.

அப்படியிருந்தால்தான் கொரோனா கட்டுப்படும். அததைத்தான் பிரதமர் அறிவித்திருக்கிறார். இது எதிர்பார்த்த ஒன்றுதான்.

இது மூன்றாம் காலக்கட்டம். இதில் நம்மில் ஒத்துழைப்பைக் காட்டாவிட்டால் மேலும் காலம் நீட்டிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

எல்லைகளில் நுழைவுக்கட்டுப்பாடு இன்னும் ஆழமாக சோதிக்கப்படவும் கூடும்
இந்த நிலை மேலும் மோசமடையாமல் இருக்க மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு முழுமையாகபின்பற்றப்படுவதற்கு இன்னும் கடுமையாக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here