ஈப்போ, ஏப்.10-
ஈப்போ மாநகரை ஊடுருவி ஓடும் மேரு ஆற்றின் நீர் தொழிற்சாலை கழிவுகளால் மாசுபட்டுள்ளது.
மேரு ஆற்றின் தூய்மைக்கேட்டுக்கும் ஆபத்து நேர்ந்துள்ளது.
மீன்கள் செத்து, நீரில் மிதந்தபடி உள்ளன. இவ்விவகாரம் பொதுமக்களால் காணொளியாக்கப்பட்டு அதிகமாக பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்று மாலை ஆற்றுப்பகுதியில் சோதனை நடத்தப்படும் என இயற்கை சுற்றுச்சூழல் அமைச்சு அறிவித்துள்ளது.