கோலாலம்பூர்: செராஸ் மற்றும் புத்ராஜெயா ஆகிய தனித்தனி இடங்களில் 24 மணி நேரத்திற்குள் இரண்டு உணவு விநியோக சேவை ஊழியர்கள் கெத்தம் ஜூஸ் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.
புத்ராஜெயா காவல்துறை தலைமை உதவி ஆணையர் ரோஸ்லி ஹாசன் கூறுகையில், சந்தேக நபர் ஒரு சாலைத் தடுப்புச் சோதனையில் நிறுத்தப்பட்டார், அங்கு விசாரணையில் (கெத்தம் ஜீஸ்) குறைந்தது ஒரு லிட்டர் அவரது மோட்டார் சைக்கிள் கூடையில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேகிக்கப்பட்ட அந்த நபரை சோதனைக்குட்படுத்தியபோது அவர் அந்த ஜூஸை உட்கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவரது யமஹா 135 எல்சி மோட்டார் சைக்கிளில் மேற்கொண்ட சோதனையில் கெத்தம் ஜூஸ் என்று நம்பப்படும் ஒரு லிட்டர் பச்சை திரவம் கொண்ட 1.5 லிட்டர் பாட்டிலில் இருப்பது தெரியவந்தது.
“சம்பவ இடத்திலேயே மேலும் விசாரித்தபோது, பாட்டில் உள்ள திரவம் உண்மையில் கெத்தம் ஜூஸ் தான் என்று சந்தேக நபர் ஒப்புக் கொண்டார்.
விஷ சட்டம் 1952 இன் பிரிவு 30 (3) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விரைவில் துணை அரசு வக்கீல் வழக்கினை நடத்துவார் எதிர்பார்க்கப்படுவதால், சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, அந்த பொருள் பறிமுதல் செய்யப்பட்டது என்று ரோஸ்லி கூறினார்.
பின்னர், சில மணிநேரங்களுக்குப் பிறகு, நேற்று காலை 8.45 மணியளவில் இதேபோன்ற குற்றத்திற்காக மற்றொரு உணவு விநியோக ஊழியர் புக்கிட் ஜாலில சாலையில் செராஸ் போலீசார் நடத்திய சோதனையின்போது கைது செய்யப்பட்டார்.
செராஸ் காவல்துறை தலைமை உதவி ஆணையர் முகமட் மொக்ஸைன் முகமது ஜோன், 32 வயதான உள்ளூர், சந்தேகநபர், சாலை தடுப்பின் சந்தேகத்துடன் செயல்படுவதை கடமையில் இருந்த அதிகாரிகள் கவனித்ததை அடுத்து கைது செய்யப்பட்டதாக விளக்கினார்.