கொரோனா தாக்கம் – தாயார் உணவு வாங்கி வர சென்ற வேளையில் 13 வயது மகள் கொலை

மெக்ஸிகோ நாட்டில் ஊரடங்கு காரணமாக குடியிருப்பில் தனித்திருந்த 13 வயது சிறுமியை நபர் ஒருவர் வீடு புகுந்து கற்பழித்து கொலை செய்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நோகலேஸ் நகரில் அமைந்துள்ள அவரது குடியிருப்பின் படுக்கை அறையில் 13 வயதேயான அன்னா பவுலாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கொரோனா பரவலை அடுத்து குடியிருப்பில் ஒருவர் மட்டுமே வெளியே செல்ல முடியும் என்ற கட்டுப்பாடுகளால், சம்பவத்தன்று அன்னாவின் தாயார் உணவுப் பொரருட்களை வாங்க வெளியே சென்றுள்ளார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி அன்னா தாக்குதலுக்கு இரையாகியுள்ளார். வீடுபுகுந்த அந்த நபர் சிறுமி அன்னாவை கற்பழித்து  பின்னர் கொலையும் செய்துள்ளார்.

இதனிடையே அன்னா தொடர்பில் எந்த தகவலும் இல்லை என அவரது முன்னாள் கணவர் தெரிவிக்க, பல்பொருள் அங்காடியில் இருந்து விரைந்த அந்த தாயாருக்கு, அன்னாவின் சடலமே காண முடிந்தது.

மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அன்னா, அவர்கள்து படுக்கை அறை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தற்போது இந்த விஷயம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளியை உடனடியாக கைது செய்து அன்னாவுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here