குவாந்தான் : ஏப்.13-
விபத்தொன்றில் சிக்கியதில் தன் காதலி மரணமடந்தாதை அறிந்த காதலன், காதலியின் உடலை அவரதுவீட்டின் கார் நிறுத்துமிடத்தில் விட்டிசென்ற சம்பவம் ரொம்பின் பெல்டா கெராத்தோங் பகுதியில் நிகழ்ந்துள்ளது என்ற ரொம்பின் மாவட்ட காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி அசாரி மிஸ்கான் கூறினார்.
பயத்தால் என்ன செய்வதென்று தெரியாமல் 17 வயதுடைய காதலியின் சடலத்தை மரணமடைந்தவரின் வீட்டு கார் நிறுத்துமிடத்தில் போட்டுச்சென்றதை காதலியின் தாத்தா காலை 10 மணியளவில் கண்டுபிடித்தார். அவர் தனது நான்கு சக்கர வாகனத்தை கார் நிறுத்துமிடத்தில் நிறுத்திக்கொண்டிருந்தபோது இதைக் கண்டுபிடித்தார் என்று போலீசார் கூறினர்.
சாரோங் எனப்படும் கைலியால் கட்டப்பட்டிருந்த ஒரு மூட்டையைப் பரிசோதித்த தாத்தா ,அவரது பேத்தி ரத்தத்தில் மூடியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ஆரம்ப விசாரணையின்போது பாதிக்கப்பட்டவரின் காதலன், (17 வயது) அதிகாலை 3.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் காதலியை வெளியே அழைத்ததுச் சென்றிருக்கிறான். ஃபெல்டா கெராத்தோங் 3 இல் உள்ள தொழிற்சாலை அருகே ஒரு சாலையின் நடுவில் எருமையைத் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறான்.
விபத்தில் பாதிக்கப்பட்ட காதலி தலை தொடையில் காயம் அடைந்ததால் மயக்கமடைந்ததாகப் பாதிக்கப்பட்டவரின் காதலன் கூறினான், தனக்கு கை கால்களில் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக விசாரணையிலும் கூறியிருக்கிறான் செய்தியாளர்களிடமும் இதைத்தெரிவித்திருக்கிறான்.
ஃபெல்டா கெராத்தோங் 5 இல் வசித்து வந்த பதின்ம வயது சிறுவனான காதலன் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரால் பிரச்சினை எழும் என்ற அச்சத்தில், அவசர அவசரமாக காதலியின் உடலை அவரது வீட்டின் கார் நிறுத்துமிடத்தில் விட்டு வெளியேறியதாகக் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், அவர் காணாமல் போனதை அறியாமல், அவர் வீட்டின் மேல் மாடியில் தூங்கிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
மேலதிக விசாரணைக்காக பதின்ம வயது காதலன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ரொம்பினில் உள்ள முஅட்சாம் ஷா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரியான அசாரி மிஸ்கான் கூறினார்.











