நண்பரை சூட்கேசில் வைத்து அடைத்து அபார்ட்மெண்டுக்கு எடுத்து வந்த மாணவர்

நண்பரை சூட்கேசில் வைத்து எடுத்து வந்த மாணவர்

மங்களூரு, ஏப்ரல் 13- 

கொரோனா வைரஸால் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வெளியில் இருந்து வருபவர்களை உள்ளே அனுமதிப்பது இல்லை

மங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு வினோதமான சம்பவத்தில், ஒரு மாணவர் தனது நண்பரின் குடியிருப்பில் பதுங்க முயன்றபோது பிடிபட்டார்.

கொரோனா வைரஸ் பயத்தை கருத்தில் கொண்டு குடியிருப்புக்குள் எந்தவொரு நபருக்கும் அனுமதி மறுத்தது மங்களூரை சேர்ந்த ஒரு அபார்ட்மென்ட் அசோசியேஷன். இதனால் வெளியாட்கள் யாரையும் அனுமதிப்பது இல்லை. இதனால் அங்கு தங்கி இருந்த மாணவர் ஒருவர் தன்ன்னுடன் தனது நண்பரை தங்க வைக்க ஒருபெரிய சூட்கேசில அடைத்து வைத்து இழுத்து கொண்டு் வந்தார்.

இருந்தாலும் அசைந்த அந்த சூட்கேசை பார்த்துசந்தேகம் அடைந்த குடியிருப்பு நிர்வாகிகள் சூட்கேசை திறக்கும் படி கூறினர். சூட்கேசை திறந்த போது அதில் இருந்து மாணவர் வெளியே வந்தார்.

இதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினார்கள் ஆனால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here