கிரிக், ஏப்.14-
சட்டவிரோதமாக ரப்பர் மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்து வந்த கும்பல் ஒன்று பேரா மாநில வனத்துறை அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறி வலுக்கட்டாயமாக தொழிலாளர்களை காட்டுக்குள் கொண்டு வந்ததற்காக வெட்டுமர நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நான்கு லோரிகள், ஏழு மரம் வெட்டும் இயந்திரங்கள், வெட்டப்பட்ட மரங்கள் ஆகியவை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.