சிங்கப்பூர், ஏப்.14-
சிங்கையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வேலை பார்த்து வந்த மலேசியர் மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெக் பார்க் கிரசண்ட் ஆதரவற்றோர் இல்லத்தில் பணியாற்றி வரும் மூவரும் தற்போது தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.
அந்நியத் தொழிலாளர்களை அந்நாட்டு அரசாங்கம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
சிங்கப்பூரில் கொரோனா தொற்று காரணமாக இதுவரையில் எண்மர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.