முதல் மரியாதைக்குரியவர்கள்

முதல் மரியாதைக்குரியவர்கள்

கோலாலம்பூர், ஏப்.15-

கொரொனா -19 தொற்று பரவுவதைத்தடுக்கும் முயற்சிகளில் முன்னணிக்கு உதவும் வகையில் ஒரு குழு பின்னணியில் வேலை செய்வதைச் சொல்லாமால் இருக்க முடியாது. இவர்களின் பணி வெளியில் தெரிவதில்லை.

இவர்கள் பார்வையில் படாமல் பணிசெய்கின்றவர்கள் . இவர்கள் இல்லாமல் முன்னணி இயங்க முடியாது.

ஆய்வுக்கூடத்தில் வேலை செய்கின்றவர்கள் முழுமையான அர்ப்பணிப்போடு இயங்குகின்றனர். நிழலாக இருக்கின்றவர்கள். ஆனாலும் நிஜமானவர்கள்.

சோதனை என்று வரும்போது அதில் தேர்ச்சிப்பெற்றவர்கள் மட்டுமே கையாளமுடியும். அதைச் செய்யக்கூடியவர்கள் முன்னணியின் பின்னணியாளார்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்துகளும் இல்லை. இவ்விரு அணிகளும் எந்த அணியிலும் சேராதவர்கள். யாரின் பார்வையிலும் படாதவர்கள்.

கடுமையான நேரத்தில் கூடுதல் நேரம் உழைப்பவர்கள். வீட்டையும் மறந்து வேலையில் மூழ்கிக்கிடக்கும் இவர்களுக்கும் முதல் மரியாதை உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here