ஜோகூர் மாநிலத்தில் ட்ரைவ த்ரூவ் சந்தை தவிர்ப்பு

ஜோகூரின் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹும் சுல்தான் இஸ்கந்தர்

ஜோகூர் பாரு, ஏப்.16-

கோவிட் -19 நோய்த் தொற்றின் ஆபத்து மிக அதிகமாக இருப்பதினால் ஜோகூர் மாநிலத்தில் டிரைவ்- த்ருவ் வகையிலான ரமலான் சந்தைக்கு வாய்ப்பில்லை என்று ஜோகூரின் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹும் சுல்தான் இஸ்கந்தர் கூறியிருக்கிறார்.

இவ்வகை சந்தை நடத்தப்பட்டால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதைத் தவிர்க்கமுடியாது. இதனால் கூடுதல் பிரச்சினைகள் உருவாக வாய்ப்பிருக்கிறது. இது, கடமையில் ஈடுபடும் அமலாக்க அதிகாரிகளுக்கும் சுமையாகிவிடும் .

இதுபோன்ற தருணத்தில் மக்கள் இடைவெளியைக் குறைக்க இயலாமல் போகும். நெருங்கிய தொடர்பைக் குறைப்பது கடினமாக இருக்கும். கொரொனா தொற்று அதிகரிப்பைத் தடுக்க இது சரியான வழிமுறையாக இருக்காது. என்று சுல்தான் இப்ராஹிம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தின் அறிக்கையில் இதனைக் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சுல்தான் இப்ராஹிம் பிரதமர், டத்தோ ஹஸ்னி முகமது, மாநிலச் செயலாளர் டத்தோ அஸ்மி ரோஹானி ஆகியோரிடமிருந்தும் போதிய விளக்கங்களைப் பெற்றிருக்கிறார்.

மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு இப்போது மூன்றாம் கட்டத்தில் இருக்கிறது. மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில் பொறுமை என்பது ஈமானின் ஒரு பகுதியாகும் என்றார் அவர். இதை எதிர்ப்பதால் நிலைமை மோசமடையக் கூடும்.. தேவைப்பட்டால் மட்டுமே வெளியே செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

சாதாரண அன்றாட வழக்கத்தைக் கடந்து செல்வது எவ்வளவு சங்கடமாக இருக்கிறது என்பதை புரிந்துகொண்டிருக்கிறேன் என்று சுல்தான் இப்ராஹிம் கூறிப்பிட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here